Skip to main content

ஒரு மாநிலத்தின் அடையாளமாகும் சோனு சூட்!   

Published on 17/11/2020 | Edited on 17/11/2020

 

sonj

 

இந்தியத் திரையுலகின் பிரபல வில்லன் நடிகர் சோனு சூட். அனுஷ்காவுடன் 'அருந்ததி', சிம்புவுடன் 'ஒஸ்தி' உள்ளிட்ட படங்களிலும் வில்லனாக நடித்துள்ளார். 

 

பஞ்சாபைச் சேர்ந்த சோனு சூட், கரோனா ஊரடங்கின் போது புலம்பெயர் தொழிலாளர்கள், தங்களது சொந்த ஊருக்குச் செல்ல உதவினார். மேலும் சமூக வலைத்தளம் மூலமாகக் கல்வி, மருத்துவம் தொடர்பாக  உதவி கேட்பவர்களுக்கும் தனது உதவிக்கரத்தை நீட்டி வருகிறார்.                       

 

இந்த நிலையில், சோனு சூட்டை பஞ்சாப் மாநிலத்தின் அடையாளமாக நியமிக்க வேண்டுமென, பஞ்சாப் மாநிலத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரி கருணா ராஜு, இந்தியத் தேர்தல் ஆணையத்திற்குப் பரிந்துரை செய்திருந்தார். இப்பரிந்துரையை இந்தியத் தேர்தல் ஆணையம் தற்போது ஏற்றுக்கொண்டுள்ளது.        

 

நேர்மையாக வாக்களிப்பது தொடர்பாக பஞ்சாப் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த, சோனு சூட்டை பஞ்சாப் மாநிலத்தின் அடையாளமாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சோனு சூட், பஞ்சாப் மாநில அடையாளமாக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்