Skip to main content

"உயிருடன் இருப்பதே அதிர்ஷ்டம்" - விபத்து குறித்து விளக்கமளித்த பாடகி ரக்‌ஷிதா

Published on 08/05/2023 | Edited on 08/05/2023

 

singer rakshita accident

 

தொலைக்காட்சியில் ஒரு பாட்டு நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் பாடகி ரக்‌ஷிதா. பின்பு திரைப்படங்களிலும் பாட ஆரம்பித்து தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் ஆல்பம் பாடலை பாடியுள்ளார்.  ஏ.ஆர். ரஹ்மான் இசையில் இவர் பாடிய 'காலத்துக்கும் நீ வேணும்' (வெந்து தணிந்தது காடு), சொல் (பொன்னியின் செல்வன் 1) உள்ளிட்ட பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. 

 

திரைப்படங்கள், ஆல்பம் என இதைத் தவிர பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் பாடி வருகிறார். அந்த வகையில் மலேசியாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அப்போது தனக்கு விபத்து நேர்ந்ததாக அவரது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பகிர்ந்துள்ள பதிவில், "ஒரு பெரிய விபத்தை சந்தித்தேன். மலேசியாவில் உள்ள விமான நிலையத்திற்கு திரும்பிச் செல்லும்போது நான் சென்ற கார் டிவைடரில் மோதி சாலையோரத்தில் நொறுங்கியது.

 

அப்போது 10 வினாடிகள் என் முழு வாழ்க்கையும் என் கண் முன்னால் வந்தது. ஏர் பேக்கிற்கு நன்றி. அவை இல்லையென்றால் நிலைமை மோசமாக இருந்திருக்கும். நடந்ததை பற்றி நினைத்தால் இன்னும் உடல் நடுங்குகிறது. ஆனால் நானும், ஓட்டுநரும் மற்றும் முன் இருக்கையில் இருந்த மற்ற சக பயணிகளும் சில காயங்களுடன் பாதுகாப்பாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். உயிருடன் இருப்பதே அதிர்ஷ்டம் அதற்காக நன்றியுணர்வோடு இருக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்