பல வருட போராட்டத்திற்குப் பிறகு பிரச்சனைகள் அனைத்தும் சரி செய்யப்பட்டு, சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் 'மாநாடு' படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. ஹைதரபாத்தில் பிரம்மாண்ட செட் அமைத்து, படத்தின் ஷூட்டிங் நடைபெற்ற நிலையில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஷூட்டிங் நிறுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி மார்ச் இறுதியில் தேசிய ஊரடங்கை அமலாக்கினார். வெளியே செல்ல முடியாத காரணத்தால் தனது வீட்டிற்குள்ளேயே ஓட்டப்பயிற்சி எடுப்பதை வீடியோவாக எடுத்து, அதை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வைரலாக்கியுள்ளார்.
இந்நிலையில், விடிவி கணேஷ் மற்றும் தனது குடும்பத்தாருக்காக சிம்பு சமைக்கும் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் விடிவி கணேஷ், “வருகின்ற மனைவிக்கு எந்த வேலையும் இல்லாமல் நீயே செய்துவிடுவாய் போல” என்று கிண்டலாக கேட்க, அதற்குப் பதிலளித்த சிம்பு, “வரப்போகும் எனது மனைவி என்ன வேலைக்காரியா? அவருக்குப் பிடித்தால் சமைக்கட்டும் இல்லை என்றால் பிடித்த வேலையைப் பார்க்கட்டும்” என்றார். தற்போது இந்த வீடியோ ட்விட்டர், பேஸ்புக் என அனைத்து சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது.