கவுதம் மேனன் இயக்கத்தில் 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இப்படத்தில் மாதவன் நாயகனாக நடிப்பார் என்று முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில் முதல் பாகத்தில் நடித்த சிம்புவுடன் இணைந்து அனுஷ்கா நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இதை உறுதிப்படுத்தும் விதமாக சிம்பு, ஏ.ஆர்.ரஹ்மான், கவுதம் மேனன் இணைந்து எடுத்த செல்பி புகைப்படம் நேற்று வெளியாகி வைரலாகியுள்ளது. இதன் மூலம் மூன்றாவது முறையாக இந்த வெற்றிக் கூட்டணி இணைந்திருக்கிறது. சிம்பு தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் நடித்து வரும் நிலையில் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் 'மாநாடு' படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த இரு படங்களை முடித்த பிறகு கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. `விண்ணைத்தாண்டி வருவாயா', அச்சம் என்பது மடமையடா படங்களில் கவுதம் மேனன் - சிம்பு - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி ஏற்கனவே இணைந்துள்ளது குறிப்பிடதக்கது.