![simbu](http://image.nakkheeran.in/cdn/farfuture/PobmBW10bCvQBIkG8egyTPaVkVc0zQQjI-Xtt9jUBcc/1608558142/sites/default/files/inline-images/simbu-1_4.jpg)
இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வந்த, 'ஈஸ்வரன்' படத்தைத் தொடர்ந்து, நடிகர் சிம்பு நடித்து வரும் படம் 'மாநாடு'. வி ஹவுஸ் நிறுவனம் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்க, வெங்கட்பிரபு இயக்குகிறார். அரசியல் பின்னணியில் உருவாகி வரும் இப்படத்தில், அப்துல் காலிக் என்கிற இஸ்லாமிய இளைஞனின் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்து வருகிறார்.
பாண்டிச்சேரியில் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், மழை காரணமாகத் திட்டமிட்டபடி வெளிப்புறக் காட்சிகளைப் படமாக்குவதில் சிக்கல் எழுந்ததுள்ளது. இதனால், படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்படும் எனப் படக்குழு நினைத்த வேளையில், சிம்பு அளித்த ஒத்துழைப்பால் ஒருநாளைக் கூட வீணாக்காமல், உள்ளரங்கு காட்சிகளைப் படமாக்கிய வெங்கட் பிரபு, திட்டமிட்டதற்கு முன்பாகவே அப்பணிகளை முடித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
அதன்பின்னும் மழை விடாமல் தொடர்ந்ததால், மாநாடு படக்குழுவினர் வேறு வழியின்றி சென்னை திரும்பியுள்ளனர். விரைவில் அடுத்தக்கட்டப் படப்பிடிப்பிற்காக மீண்டும் பாண்டிச்சேரி கிளம்பவுள்ள படக்குழு, அதனையடுத்து ஏற்காடு கிளம்பத் திட்டமிட்டுள்ளது.
சிம்புவின் இச்செயலால் தயாரிப்பு தரப்பு மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளதாகக் கூறுகிறார்கள், நமக்கு நெருங்கிய சினிமா வட்டாரங்கள்.