
கதாநாயகியாகவும் கதையின் நாயகியாகவும் கவனம் செலுத்தி வருகிறார் கீர்த்தி சுரேஷ். கடைசியாக தனது இந்தி அறிமுகம படமான பேபி ஜான் படத்தில் நடித்திருந்தார். இப்போது கைவசம் அவர் கதையின் நாயகியாக தமிழில் நடித்துள்ள கண்ணி வெடி மற்றும் ரிவால்வர் ரீட்டா படத்தை வைத்துள்ளார். மேலும் இந்தியில் அக்கா எனும் தொடரை வைத்துள்ளார்.
இதனிடையே தனது நீண்ட நாள் காதலரான ஆண்டனி தட்டிலை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மணமுடிந்தார். இதையடுத்து அவர் நடிக்கும் படம் குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இடையே சில தகவல்கள் மட்டும் வெளியாகியிருந்தது.
அந்த வகையில் சமீபத்தில் பாலிவுட்டில் ரொமான்ஸ் காமெடி ஜானரில் ஒரு படம் நடிக்க கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியானது. இதில் கூடுதல் தகவலாக தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகர் ரன்பீர் கபூரிடம் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.