Skip to main content
சற்று முன்

சிம்புவின் அடுத்த படம் இது தான்... அதிகாரபூர்வ அறிவிப்பு 



rr&Seemaraja rr&seemaraja
simbu

 

 

 

'செக்க சிவந்த வானம்' படத்தையடுத்து நடிகர் சிம்பு அடுத்ததாக இயக்குனர் வெங்கட் பிரபுவை சந்தித்து பேசியதால் இவருடன் இணைந்து 'பில்லா 3' படத்தில் சிம்பு நடிக்கவிருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இதையடுத்து இவர் 'துருவங்கள் பதினாறு' பட இயக்குநர் கார்த்திக் நரேனையும் சந்தித்தார். இந்த சந்திப்பில் கார்த்திக் நரேன், சிம்புவிடம் த்ரில்லர் கதை ஒன்றை கூறியிருப்பதாகவும், அதில் சிம்பு  நடிக்க இருப்பதாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் வைரலாகியது. இந்நிலையில் சிம்பு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படம் 2019ல் தயாராகிறது. மேலும் படத்தில் பணியாற்றவிருக்கும் நடிகர்கள், கலைஞர்கள், படத்தின் தலைப்பு, அனைத்தும் அடுத்தடுத்து வெளியாகும் என்றும், இது 'பில்லா 3' படம் இல்லை, இது ஒரு புதுமையான கதை என்றும் வெங்கட் பிரபு விளக்கம் அளித்து ட்வீட் செய்துள்ளார்.

 

 

 

 

 


உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்