Skip to main content

‘சைலண்ட்’ பட ட்ரைலர் வெளியீடு

Published on 04/12/2024 | Edited on 04/12/2024
Silent movie trailer released

ராம் பிரகாஷ் தயாரிப்பில், இயக்குநர் கணேஷா பாண்டி இயக்கத்தில் உருவாகியுள்ள படம்  ‘சைலண்ட்’. இப்படத்தை இயக்கியதோடு முதன்மை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் கணேஷா பாண்டி. இப்படத்தில் மதியழகன் படத்தில் நடித்த ஆரத்யா கதாநாயகியாக நடித்திருக்க தொப்பி படத்தின் நாயகன் முரளி ராதாகிருஷ்ணன், தோ.சமயமுரளி, அறம் ராம்ஸ், பிக்பாஸ் நமீதா, மாரிமுத்து ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சென்னை தெற்கு மண்டல ஜி.எஸ்.டி கூடுதல் ஆணையர் தோ.சமயமுரளி ஐ.ஆர்.எஸ். இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடந்து வருகிறது. படத்தை வரும் 29 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது. இந்த நிலையில் படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. உடை மற்றும் நடவடிக்கைகளில் பெண்ணாக தோற்றத்தை மாற்றிக்கொண்ட  ஒருவன் , தன் தாயை தானே கொன்றதாக போலீஸ் அதிகாரியிடம்  ஒப்புக்கொள்கிறான். அந்த கொலைக்குப் பின்னால் இருக்கும் உண்மை என்ன ? என்பதை சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லர் ஜானரில் சொல்லும் படமாக இந்தப் படம் உருவாகியுள்ளது போல் தெரிகிறது. 

சார்ந்த செய்திகள்