கிரியேட்டிவ் என்டர்டெயின்மெண்ட் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் சார்பில் டாக்டர். கோ. தனஞ்செயன், லலிதா தனஞ்செயன் இணைந்து தயாரித்து, பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில், சஸ்பென்ஸ், எமோஷனல் திரில்லராக உருவாகும் படத்திற்கு இதுவரை பெயர் சூட்டப்படாமல் இருந்தது.

சிபிராஜ் நாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு தற்போது 'கபடதாரி' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ‘கபடதாரி’ என்றால் பாசாங்குக்காரன் அல்லது வேஷக்காரன் என்று பொருள். இதில் சிபிராஜ் ஜோடியாக நந்திதா ஸ்வேதா நடிக்கவுள்ளார். மேலும் முக்கிய பாத்திரத்தில் நாசர், ஜெயபிரகாஷ், ஜே.சதிஷ் குமார், மயில்சாமி மற்றும் சில முக்கிய நடிகர்கள் நடிக்கிறார்கள். சிபிராஜ் இதுவரை ஏற்று நடித்த பாத்திரங்களை விட இந்த படத்தில் முக்கியமான மற்றும் வித்தியாசமான கதாபாத்திரமாக இது இருக்கும் என்கிறார் இப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் டாக்டர். கோ. தனஞ்செயன்.

மேலும் கதையை எம்.ஹேமந்த் ராவ் எழுத, திரைக்கதையையும் வசனங்களையும் இயக்குநர் மகேந்திரனின் மகனும், சச்சின் பட இயக்குனருமான ஜான் மகேந்திரன் ஆகியோர் ஏற்கிறார்கள் என்றார். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் 1-ஆம் தேதி துவங்குகிறது. சென்னை மற்றும் ஹைதராபாத்தில் உள்ள முக்கியமான இடங்களில் படப்பிடிப்பு நடத்தவுள்ளார்கள். ஒரே கட்டமாக முழுவீச்சில் படப்பிடிப்பு நடைபெற்று மார்ச் 2020-ல் படம் வெளியாகவுள்ளது.