Published on 23/06/2018 | Edited on 24/06/2018
![shriya](http://image.nakkheeran.in/cdn/farfuture/N7Uo_YlMuaC_6WONvXK-MLL1uqu-G1HgOS02SEkd5WQ/1533347678/sites/default/files/inline-images/shriya-saran_151849998610.jpg)
தென்னிந்திய நடிகைகள் கல்யாணத்திற்கு பிறகும் தொடர்ந்து கதாநாயகியாக நடிப்பது தற்போது ட்ரெண்டாகி வருகிறது. நடிகை சமந்தா சென்ற ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாயை திருமணம் செய்துகொண்டு தொடர்ந்து நாயகியாக நடித்து அடுத்தடுத்து ஹிட் படங்கள் கொடுத்து இன்னமும் முன்னணி நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் தனது ரஷ்ய காதலரும், டென்னிஸ் வீரருமான ஆண்ட்ரே கோஷீவ் என்பவரை திருமணம் செய்துகொண்ட ஸ்ரேயா திருமணத்திற்கு பிறகு ரஷ்யாவில் குடியேறிவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது சமந்தா பாணியில் மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார். தற்போது 2 தெலுங்கு படங்களில் நடித்துவரும் ஷ்ரேயா இதுகுறித்து பேசும்போது.... "திருமணம் செய்துகொண்டாலும் இப்போதைக்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணம் இல்லை. இன்னும் 20 படங்கள் நடித்த பிறகே அதுபற்றி யோசிப்பேன். திருமணம் என் சினிமா வாழ்க்கைக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது" என கூறியுள்ளார்.