Skip to main content

"பயமுறுத்தும் சினிமா உலகில் நுழைந்தபோது..."- ஷாருக்கான் உருக்கம்!

Published on 01/05/2020 | Edited on 01/05/2020

 

srk

 

பழம்பெரும் ஹிந்தி நடிகரான ராஜ் கபூரின் இரண்டாவது மகனும், நடிகர் ரன்பிர் கபூரின் தந்தையுமான நடிகர் ரிஷி கபூர் கடந்த 2018- ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இதற்காக அவர் கடந்த ஒரு வருடமாக அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். 


இதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் அவர் அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினார். பின்னர் மும்பையில் உள்ள அவரது வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வந்த 67 வயதான ரிஷி கபூருக்கு நேற்று திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து, அவர் உடனடியாக மும்பையில் உள்ள ஹெச்.என். ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று காலை ரிஷி கபூர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக அவருடைய இறுதி அஞ்சலி உடனடியாக நடைபெற்று தகனம் செய்யப்பட்டது. பலரும் சமூக வலைத்தளங்களின் மூலமாக அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வந்தனர். இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடுமையாக இருப்பதால் தில்லியில் இருக்கும் அவருடைய மக்களால் மும்பையில் நடைபெற்ற இறுதி அஞ்சலியில் கலந்துகொள்ள முடியாமல் வீடியோ காலில் பார்த்தார். 

 

 


இந்த நிலையில் நேற்றிரவு மிகவும் உருக்கமாக ஷாருக்கான், ரிஷி கபூர் குறித்து ஒரு நீண்ட பதிவைப் பதிவிட்டுள்ளார். அதில், "ஒரு இளைஞனாக பயமுறுத்தும் இந்த சினிமா உலகில் நுழைந்தபோது, நான் பார்க்கப்பட்ட விதம் எனக்குப் பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்தியது. எனக்குப் போதிய திறமை இல்லையோ என்ற அச்சம் ஏற்பட்டது. தோல்வி என்பது எனக்கு ஒரு பிரச்சினையாய் இருக்கவில்லை. ஏனெனில் நான் தோற்றாலும் மிகப்பெரிய நடிகரான ரிஷி கபூருடன் இணைந்து நடித்திருந்தேன்.

முதல்நாள் படப்பிடிப்பில், என்னுடைய சீன் முடிவதற்காக காத்திருந்த ரிஷி கபூர் பின்னர் தனது முகத்தில் அந்தப் புகழ்பெற்ற சிரிப்புடன் என்னிடம் ‘நீ மிகவும் சுறுசுறுப்புடன் இருக்கிறாயே’ என்று கூறினார். அப்போதே நான் ஒரு நடிகனாகிவிட்டேன்.

சில மாதங்களுக்கு முன்பு நான் அவரை சந்தித்து என்னை அந்தப் படத்தில் ஏற்றுக் கொண்டமைக்காக நன்றி கூறினேன். அவர் எனக்கு எந்த விதத்தில் உந்துசக்தியாக இருந்தார் என்பது குறித்து அவருக்கே தெரியவில்லை. அடுத்தவர் வெற்றியில் மகிழ்ச்சி கொள்ளும் மனம் சிலருக்கு மட்டுமே உள்ளது.
 

http://onelink.to/nknapp


பல விஷயங்களுக்காக அவரை நான் மிஸ் செய்கிறேன். அவற்றில் முக்கியமானது ஒவ்வொரு முறை நாங்கள் சந்திக்கும்போதும் என் தலையில் அவர் அன்பான முறையில் தடவிக் கொடுப்பதை. நான் இப்போது இருக்கும் நிலைக்கு காரணமான ஆசீர்வாதமாக அதை நான் எப்போதும் என் இதயத்தில் வைத்திருப்பேன். எப்போதும் அன்பு, நன்றி, அதீத மரியாதையுடன் உங்களை மிஸ் செய்வேன் சார்" என்று பதிவிட்டுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்