Skip to main content

'கண்ணே கலைமானே' படத்திற்கு அந்த வாய்ப்பில்லை ! - சீனு ராமசாமி புலம்பல் 

Published on 20/02/2019 | Edited on 20/02/2019
seenu ramasamy

 

 

உதயநிதி ஸ்டாலின், தமன்னா இணைந்து நடித்துள்ள 'கண்ணே கலைமானே' படத்தை சீனு ராமசாமி இயக்கியுள்ளார். வரும் 22ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்திற்கு ப்ரிவ்யூ காட்சி குறித்து சீனு ராமசாமி வருத்தத்துடன் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்... "என் எல்லாப்படங்களையும் சர்வக்கட்சி தலைவர்களுக்கு சிறப்புக்காட்சியாக திரைபிடல் செய்யவதுண்டு. இம்முறை திரு,உதயநிதி செல்வி தமன்னா நடித்து வரும் 22ல் வெளிவரும் #கண்ணேகலைமானே திரைப்படத்திற்கு அவ்வாய்ப்பில்லை. கூட்டணிகள் தீர்மானிக்கின்றன பிரிவியூ காட்சிகளையும்.." என உருக்கமாக பதிவிட்டுள்ளார். பாராளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி குறித்த அறிவிப்புகளும், பேச்சுவார்த்தைகளும் தற்போது பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"கண்ணே கலைமானே திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி மக்கள் கருத்து" (வீடியோ)

Next Story

நாம் ஒன்றாக வேலை செய்யலாமா என்று எந்த ஒரு ஹீரோவிடமும் நான் கேட்பதில்லை. ஆனால்.. ' - தமன்னா 

Published on 19/02/2019 | Edited on 19/02/2019
tamanna

 

ரெட் ஜெயண்ட் மூவீஸ் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் சீனு ராமசாமி இயக்கியிருக்கும் படம் 'கண்ணே கலைமானே'. உதயநிதி ஸ்டாலின், தமன்னா, வடிவுக்கரசி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். வரும் பிப்ரவரி 22ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் கலந்து கொண்டு படத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர். இதில் நாயகி தமன்னா பேசும்போது.... 

 

 

"ஒரு வருடத்திற்கு முன்னர் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்த பின்னர், இந்த படத்துடனும், மொத்த குழுவுடனும் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. இன்று காலை, வேறு ஒரு புதிய படத்தை பார்ப்பது போல் இருந்தது. நான் மிகவும் திருப்தியடைந்தேன். சீனு ராமசாமி சார் படத்தில் பல உணர்வுகளைக் கையாண்டிருக்கிறார். சப்டைட்டில் இல்லாமல் இந்த படத்தை பார்த்தால் கூட ஒருவர், இந்த படத்தின் உணர்வுகளை புரிந்து கொள்ளவும், அதை விரும்பவும் முடியும் என நான் நம்புகிறேன். இன்னமும் பாரதி கதாபாத்திரம் எனக்குள் இருக்கிறது. வழக்கமாக, நாம் ஒன்றாக வேலை செய்யலாமா என்று எந்த ஒரு ஹீரோவிடமும் நான் கேட்பதில்லை. ஆனால் நான் இப்போது உங்களின் அடுத்தடுத்த படங்களில் நடிக்க என்னை பரிசீலனை செய்யுங்கள் என சீனு ராமசாமி சாரிடம் கோரிக்கை வைக்கிறேன். யுவன் ஷங்கர் ராஜா என் சினிமா வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கிறார். பாடல்களும் படத்தில்  கதாபாத்திரங்கள் போல தான் இருக்கும். ஒளிப்பதிவாளர் ஜலந்தர் சார் என்னை மிகவும் அழகாக காட்டியிருக்கிறார். இந்த படத்தை தயாரித்த உதயநிதி சாருக்கு என் நன்றி, சீனு சார் குறுகிய  காலத்திற்குள் இத்தகைய ஒரு அழகிய படத்தை எடுத்திருப்பதை பார்க்க எனக்கு ஆச்சரியமாக இருந்தது" என்றார்.