Skip to main content

"ஈழ வலியை இவரைப் போல யாராலும் சொல்லமுடியாது" - சீமான்  

Published on 21/08/2018 | Edited on 21/08/2018

இயக்குனர் பாரதிராஜாவின்  'ஓம்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சீமான், வைரமுத்து குறித்து பேசியது... 

 

seeman

 

"கருத்தம்மா படத்தில் வைரமுத்து எழுதறாரு. காட்சி என்னவென்றால் கருத்தம்மா அந்த மண்ணைவிட்டு போறா. அதுக்கு இவர் எழுதறாரு 

'போறாளே பொன்னுத்தாயி 
பொல பொலவென்று கண்ணீர் விட்டு
பால் பீச்சும் மாட்ட விட்டு
பஞ்சாரத்துக் கோழியை விட்டு
...... ...... ..... ...........
போட்டு வச்ச மூட்டை போல'

 

 

இதுல போட்டு வச்ச மூட்டை போலன்னு வரும் வரி இருக்கு பாருங்க. அதாவது அவ உணர்வற்று, வண்டியில் போட்ட மூட்டை மாதிரி போறா. இதை விட இந்தப் பாட்டுக்கு முன்னாடி ஒரு முன்னுரை பேசியிருப்பார். கருத்தம்மா படத்தோட ஒலிநாடா கேட்டா தெரியும். அதுல என்ன சொல்றாருன்னா 'ஒருவன் சொத்தைப் பிரிவது அல்ல சோகம், மரங்களை ஆடு மாடுகளை பிரிவது அல்ல சோகம், சொந்தங்களைப் பிரிவது அல்ல சோகம். அப்போ எதுதான் சோகம்? ஒருவன்தான் பிறந்த தாய் மண்ணை பிரிவதுதான் சோகம் என்கிறார். இதையே 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்துல 
'விடை கொடு எங்கள் நாடே
கடல் வாசல் தெளிக்கும் வீடே
பனை மர காடே, பறவைகள் கூடே
மறுமுறை ஒரு முறை பார்போமா?
உதட்டில் புன்னகை புதைத்தோம்
உயிரை உடம்புக்குள் புதைத்தோம்
வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்
............ ................. ................... 
கந்தல் ஆனாலும் தாய் மடி போல் 
சொர்க்கம் சென்றாலும் சொந்த ஊர் போல்
ஒரு சுதந்திரம் வருமா? வருமா? 
............. ............... ................. 
கண் திறந்த தேசம் அங்கே
கண் மூடும் தேசம் எங்கே? 

இந்த வரிகளை எல்லாம் எழுதலாம், ஆனா இவரைத் தவிர வேற கவிஞன் கிடையாது. இதெல்லாம் அந்த வலியை உணர்ந்தவனுக்குதான் தெரியும். டிவி நிகழ்ச்சியில நம்ம பிள்ளைங்க ஒருவொரு வாட்டியும் இந்தப் பாட்ட பாடும் போதும் அதுல மொழி புரிந்தவன், புரியாதவன், இசை தெரிந்தவன், தெரியாதவன், ஈழத் தாயகத்தின் பாதிப்பு, அந்த இனப்படுகொலையின்  வலி உணர்ந்தவன், உணராதவன். அத்தனை பேரும் அழுகுறான். கவிப்பேரரசு வைரமுத்தை தவிர வேறு யாரால் இந்த வலியை ஒரு ஆறு நிமிடப் பாட்டுக்குள் கொண்டுவந்து தரமுடியும்...?".      

 

 


 

சார்ந்த செய்திகள்