Skip to main content

சதீஷுக்கு ஜோடியாகும் சன்னி லியோன்! - பூஜையுடன் ஆரம்பம்!

Published on 20/04/2021 | Edited on 20/04/2021

 

csavavs

 

வரலாற்று பின்னணியில் உருவாகும் ஒரு ஹாரர் காமெடி படத்தை இயக்குகிறார் “சிந்தனை செய்” படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் யுவன். சன்னி லியோன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும்  இப்படத்தினை  விஏயு என்டர்டைன்மெண்ட் சார்பில் தயாரிப்பாளர் டி.வி.சக்தி மற்றும் வொயிட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் கே.சசிகுமார் இணைந்து தயாரிக்கின்றனர். சன்னி லியோனுடன் நகைச்சுவை நடிகர்கள் சதீஷ், மொட்டை ராஜேந்திரன்,ரமேஷ் திலக் உள்ளிட்டப் படலர் நடிக்கிறார்கள். சென்னை, பெரம்பலூர், மும்பை என பல்வேறு இடங்களில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ள படக்குழு இப்படத்தை பூஜையுடன் இன்று தொடங்கியது. இப்படம் குறித்து இயக்குநர் யுவன் கூறும்போது....

 

vsgsdb

 

"எனது இயக்கத்தில் வெளியான “சிந்தனை செய்” படம் விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் பெரும் பாராட்டுக்களைப் பெற்றது. பின்னர் தெலுங்கில் 'கதர்னாக்', 'ரணம்' மற்றும் பல படங்களுக்குத் திரைக்கதை ஆசிரியராகப் பணியாற்றினேன். தற்போது மீண்டும் இப்படம் மூலம் தமிழுக்குத் திரும்பியிருக்கிறேன். ஹாரர் காமெடி படங்களுக்கு தமிழக ரசிகர்களிடம் எப்போதும் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. இங்குள்ள மக்கள் ஹாரர் காமெடியை குடும்பத்துடன் கொண்டாடுகிறார்கள். அந்த வகையில் ஒரு புதுமையான ஹாரர் காமெடி திரைக்கதையை உருவாக்கியுள்ளேன். முதல்முறையாக இப்படம் வரலாற்றுப் பின்னணியில் ஹாரர் காமெடி கதையினை  சொல்லும் படமாக இருக்கும். 

 

ghdbsb

 

இப்படத்தில் மிகவும் முக்கியமான, முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிகை சன்னி லியோன் நடிக்கிறார். வேறு நாயகிகள் நடிப்பதை விடவும் சன்னி லியோன் மாதிரியான ஒரு ஹீரோயின், அந்த கதாபாத்திரத்தைச் செய்யும் போது அக்கதாபாத்திரத்திற்கு ஒரு புது அடையாளம் கிடைக்கும் என நினைத்தோம். ரசிகர்கள் கண்டிப்பாக அவரை திரையில் கொண்டாடுவார்கள். மேலும் இப்படத்தில் ஒரு வித்தியாசமான நாயகனாக சதீஷ் மற்றும் மொட்டை ராஜேந்திரன், ரமேஷ் திலக், தங்கதுரை, வினோத் முன்னா உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். படத்தின் படப்பிடிப்பை சென்னை, பெரம்பலூர், துறைமுகம் மற்றும் 25 நாட்கள் மும்பையில் படமாக்கத் திட்டமிட்டுள்ளோம். படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் படத்தின் படப்பிடிப்பைத் துவக்கவுள்ளோம்" என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்