![saravanan arul](http://image.nakkheeran.in/cdn/farfuture/gGredcw2PNrgsBavsnROWdKPBWLeSB6Zv8WfgirVUrI/1614582213/sites/default/files/inline-images/128_3.jpg)
சரவணா ஸ்டோர் குழுமத்தின் உரிமையாளரின் மகனான சரவணன் அருள், அவர்களது கடை விளம்பரங்களில் நடிப்பது வழக்கம். அதன் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்த அவர், தற்போது திரைப்படம் ஒன்றில் நாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தை அஜித்தை வைத்து 'உல்லாசம்' படத்தை இயக்கிய ஜே.டி - ஜெரி இயக்குகின்றனர். சரவணன் அருளுக்கு ஜோடியாக ரித்திகா திவாரி நடிக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.
கரோனா நெருக்கடி காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டிருந்த இப்படத்தின் படப்பிடிப்பு, தற்போது மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், சரவணன் அருளுக்கும் வில்லன்களுக்கும் இடையே நடைபெறும் சண்டைக் காட்சியைப் படக்குழுவினர் படமாக்கினர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இதைக் கண்ட மீம்ஸ் கிரியேட்டர்ஸ்கள் 'ஆக்ஷனில் கலக்கும் அண்ணாச்சி' என மீம்ஸ்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
கரோனா பரவலுக்கு முன், சரவணன் அருளுக்கும் நடிகை ரித்திகா திவாரிக்கும் இடையேயான காதல் பாடல் பிரம்மாண்டமாக அரங்குகள் அமைத்து படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.