Skip to main content

தனக்கென தனி முத்திரை பதித்தவர் சரத்பாபு - முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

Published on 23/05/2023 | Edited on 23/05/2023

 

Sarathbabu who made his own mark - Obituary for Chief Minister Stalin

 

தமிழ் மற்றும் தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் சரத்பாபு. இயக்குநர் பாலச்சந்தர் இயக்கிய 'பட்டினப் பிரவேசம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர். தமிழ், தெலுங்கு மட்டுமல்லாமல் கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என பல மொழிகளில் கிட்டத்தட்ட 200 படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளார்.

 

சமீபத்தில் சரத்பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல் வெளியாகியிருந்தது. பின்பு அவர் இறந்துவிட்டதாகவும் தகவல் வெளியானது. இத்தகவலுக்கு விளக்கமளித்த அவரது குடும்பத்தினர் உடல்நிலை தேறி வருவதாகக் கூறினர். இந்நிலையில் ஹைதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரத்பாபு தற்போது உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 71. இவரது மறைவு திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

 

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சரத்பாபுவுக்கு தெரிவித்துள்ள இரங்கல் பதிவில், “தென்னிந்தியத் திரையுலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்து வலம் வந்த நடிகர் சரத்பாபு அவர்கள் மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். நிழல் நிஜமாகிறது, முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், வேலைக்காரன், அண்ணாமலை, முத்து போன்ற ஏராளமான திரைப்படங்களில் அவர் ஏற்று நடித்த கதாப்பாத்திரங்கள் இன்றும் தமிழ் ரசிகர்களால் நினைவுகூரப்படுகிறது. அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், திரையுலகினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
 

 

சார்ந்த செய்திகள்