Skip to main content

“உங்கள் அன்பினால் ஆரோக்கியத்துடன் மீண்டு வருவேன்”  - சமந்தா உறுதி

Published on 17/08/2023 | Edited on 17/08/2023

 

 Samantha Speech at Kushi music concert

 

விஜய் தேவரகொண்டா - சமந்தா நடிப்பில் தயாராகி இருக்கும் 'குஷி' திரைப்படத்தின் இசை நிகழ்ச்சி ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.‌ நிகழ்ச்சி முழுவதும் இசை ஆர்வலர்களையும், பார்வையாளர்களையும் மெய்சிலிர்க்க வைத்தது. இந்த இசை நிகழ்ச்சியில் பாடகர்கள் ஜாவேத் அலி, சித் ஸ்ரீராம், மஞ்சுஷா,  சின்மயி மற்றும் இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப் ஆகியோர் 'குஷி' படத்தில் இடம்பெற்ற அழகான பாடல்களைப் பாடி அனைவரையும் கவர்ந்தனர். 

 

'குஷி' படத்தின் டைட்டில் பாடலுக்கு விஜய் தேவரகொண்டாவும்- சமந்தாவும் கைகோர்த்து ஒன்றாக நடித்து, நடனமாடி காண்பித்த போது பார்வையாளர்கள் கரவொலி எழுப்பி ரசித்தனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவிசங்கர் இணைந்து தயாரிக்க, சிவ நிர்வானா இயக்கத்தில் உருவாகியுள்ள குஷி திரைப்படம் செப்டம்பர் ஒன்றாம் தேதி இந்தியா முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

 

இந்நிகழ்வில் நாயகி சமந்தா பேசியதாவது, “படப்பிடிப்பு தருணத்திலேயே இப்படத்தின் பாடல்களைக் கேட்டு 'குஷி' ஆல்பம் மீது காதல் கொண்டேன். பாடல்களை இங்கே நேரலையில் கேட்கும்போது செப்டம்பர் 1 ஆம் தேதி உங்கள் அனைவரோடும் சேர்ந்து படத்தை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. நீங்கள் அனைவரும் விரும்பும் ஒரு திரைப்படத்தை எப்போதும் உங்களுக்கு வழங்க விரும்புகிறோம். அப்படி ஒரு முயற்சியை இந்த படத்தின் மூலம் செய்துள்ளோம். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர்கள் எனக்கு பிடித்த தயாரிப்பாளர்கள். அவர்களும் எனக்கு பிடித்த மனிதர்கள். கடந்த ஒரு வருடமாக அவர்கள் எனக்கு அளித்து வரும் ஆதரவை என்னால் மறக்க இயலாது.

 

என் திரையுலக பயணத்தில் மறக்க முடியாத படம் 'குஷி'. இதில் நடிக்க வாய்ப்பு கொடுத்த இயக்குநர் சிவ நிர்வானாவிற்கு நன்றி. இசையமைப்பாளர் ஹேஷாமை தெலுங்கு பார்வையாளர்கள் தங்களது சொந்தக்காரர்களைப் போல் காண விரும்புகிறார்கள். 'குஷி' திரைப்படத்தில் மூத்த கலைஞர்கள் பலர் உள்ளனர். அவர்களின் பங்களிப்பு திரைப்படத்தை வலிமையாக்கி இருக்கிறது. நீங்கள் என் மீது காட்டும் அன்பினால் நான் ஆரோக்கியத்துடன் மீண்டு வருவேன். 'குஷி' பிளாக்பஸ்டர் ஹிட் என்பது உறுதி” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்