Skip to main content

பாதுகாவலரை அறைந்த சல்மான்... பாராட்டும்... கண்டனமும்...

Published on 06/06/2019 | Edited on 06/06/2019

உலகளவில் தனக்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் பாலிவுட் நடிகர் சல்மான் கான். வருடா வருடம் ரமலான் பண்டிகை அன்று அவருடைய படத்தை வெளியிட்டு அவர் வைத்த ரெகார்டுகளை அவரே முறியடிப்பார். 
 

salman khan

 

 

நேற்று அவருடைய நடிப்பில் வெளியானது பாரத் படம்.  கத்ரினா கைஃப், தபு, ஜாக்கி ஷெரோஃப், திஷா பட்டானி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்தை அலி அப்பாஸ் இயக்கியிருந்தார். 
 

படம் வெளியானதையொட்டி தியேட்டரில் மக்களுடன் மக்களாக படத்தை பார்க்க வந்திருந்தார் சல்மான். அவர் படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது ரசிகர்கள் கூட்டம் அலை மோதியது. அவர்கள் சல்மானுடன் செல்பி எடுக்க முயற்சித்தனர். அந்தக் கூட்டத்தில் ஏராளமான பெண்கள், சிறு குழந்தைகளும் இருந்தனர். 
 

சல்மான் அருகில் செல்ல விடாமல் அவருடைய பாதுகாவலர்கள் தடுக்க முயற்சித்தனர். சல்மானிடம் செல்பி எடுக்க ஒரு குழந்தை முயற்சி செய்ய அந்த குழந்தையிடமும் பாதுகாவலர் முரட்டுத்தனமாக நடந்துகொண்டார். அதனால் கடுப்பான சல்மான் பொதுவெளியில் அனைத்து மக்கள் இருக்கும்போது பாதுகாவலரை ஓங்கி கண்ணத்தில் அறைந்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத அவர் அதிர்ச்சி அடைந்தார்.
 

இச்சம்பவத்தை அங்கு கூடி இருந்த பலரும் தங்களின் மொபைலில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். தற்போது இது வைரலாகி வருகிறது. ஒருசிலர் குழந்தையிடம் முரட்டுத்தனமாக நடந்துகொண்ட பாதுகாவலருக்கு தக்க தண்டனை கொடுத்தீர்கள் என்று சல்மானை பாராட்டுகிறார்கள். அவர் உங்களை பாதுக்காக்கதானே இருக்கிறார் அவரை இப்படி பொதுவெளியில் வைத்து அடித்திருக்கிறீர்களே என கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

 


 

சார்ந்த செய்திகள்