Skip to main content
Breaking News
Breaking

எனக்கு அது தான் எல்லாமே - மனம் திறந்த சாய் பல்லவி 

Published on 23/05/2018 | Edited on 24/05/2018

 

sai pallavi


'தியா' படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான நடிகை சாய் பல்லவி அடுத்ததாக தனுஷுடன் 'மாரி 2', சூர்யாவுடன் என்.ஜி.கே படத்தில் நடித்து வருகிறார். பல வருடங்களாக சினிமா துறையில் இருந்தும் தன் படிப்பின் மீது கொண்ட அக்கறையின் காரணமாக ஜார்ஜியாவுக்கு சென்று டாக்டராகி பின்னர் திரும்பி வந்து தமிழ் சினிமாவில் அதிரடியாக என்டிரி கொடுத்த சாய் பல்லவி தன் பட வாய்ப்புகளை பற்றியும், டாக்டர் ஆனதை பற்றியும் பேசும்போது.... "நான் மிகவும் தெளிவாக இருந்தேன். இந்த சினிமா, பிரபலம், ரசிகர்கள் எல்லாமே என்றைக்கு வேண்டுமானாலும் கிடைக்கும்.

 

 

அதை இன்னொருவர் வந்து பறிக்க முடியாது. இன்னொரு நான்கைந்து ஆண்டுகளில் புது புது திறமையானவர்கள் வந்து என் இடத்தை பிடிப்பார்கள். ஆனால் படிப்பு அப்படி இல்லை. ஒரு நடிகை என்று சொல்வதை விட மருத்துவர் என்று சொல்லும்போது எனக்குள் ஒரு திருப்தி ஏற்படுகிறது. ஒருவரை குணப்படுத்துவது மட்டும் இல்லாமல், ஒரு நோயே வராமல் தடுக்க வேண்டும் என்பது தான் என்னோட ஆசை. எனக்கு படிப்பு தான் எல்லாமே" என்றார்.

சார்ந்த செய்திகள்