'பாகுபலி 2' என்ற மிகப்பெரும் வெற்றிப் படத்திற்குப் பிறகு இரண்டு வருடங்கள் கழித்து பிரபாஸ் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'சாஹோ'. இருந்தாலும் படம் பார்த்தவர்களிடையே இது கலவையான விமர்சனத்தையே பெற்றிருக்கிறது.

இப்படம் ரூ. 350 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து எடுக்கப்பட்டதாலும் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் வெளியிட்டார்கள்.
இந்த நிலையில் படத்தில் பிரபாஸ், ஷ்ரத்தா வரும் பேபி வோன்ட் யூ டெல் மி’ பாடலில் வரும் ஒரு குறிப்பிட்ட செட் பெங்களூரை சேர்ந்த ஷிலோ ஷிவ் சுலேமானின் ஓவியத்தில் இருந்து காப்பியடித்தது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் படத்தில் ஒவ்வொரு சீன், மைய கதை என்று அனைத்தும் திருட்டுதான் என்று சமூக வலைதளத்தில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த குற்றச்சாட்டு குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள பாலிவுட் நடிகை லிசா ரே சாஹோ, ‘அடுத்தவர்களின் படைப்பை இப்படித்தான் அப்பட்டமாக காப்பியடிப்பதா?. இது அப்பட்டமான திருட்டு, இன்ஸ்பிரேஷன் என்று கூற முடியாது’ என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட ஓவியர் ஷிலோவும் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டு சாஹோ படக்குழு செய்த காப்பியை அம்பலப்படுத்தியுள்ளார்.