சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரடக்சன்ஸ் மற்றும் அஸ்வின் கே.வின் மார்ச் 30 நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ரூம்’. பார்த்திபன் நடித்த 'அம்முவாகிய நான்' மற்றும் 'நேற்று இன்று' ஆகிய படங்களை இயக்கிய பத்மாமகன் ‘ரூம்’ படத்தை இயக்குகிறார்.


தமிழ் தெலுங்கு கன்னடம் என மூன்று மொழிகளில்உருவாகும் இப்படத்தில் தெலுங்குநாயகன் அபிஷேக் வர்மா கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக மனோசித்ரா நடிக்கிறார். இவர் ’அவள் பெயர் தமிழரசி’, ’நீர்ப்பறவை’, ’வீரம்’ ஆகிய படங்களில் நடித்தவர் ஆவார். படத்தின் ஹைலைட்டாக பெரும்பகுதி காட்சிகள் ஒரு பாத்ரூமுக்குள் நிகழ்வதாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் படத்தின் டைட்டிலுக்கு ஏற்றபடி வித்தியாசமான, தமிழ்சினிமாவில் இதுவரை மேற்கொள்ளப்படாத ஒரு புது முயற்சியில் உருவாகும் திரில்லர் படமாக இது உருவாகியுள்ளது. இந்தப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.