கரோனா வைரஸ் தொற்றால் உலகமே அரண்டுபோயுள்ள நிலையில், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்துள்ளது. இதற்கிடையே மார்ச் மாதம் டெல்லியில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாட்டில் பங்கேற்ற பலருக்கு கரோனா தொற்று இருப்பது மருத்துவ சோதனையில் உறுதியானது. இதனைத் தொடர்ந்து இந்த மாநாட்டில் பங்கேற்றவர்கள் தாமாக முன்வந்து சோதனை செய்து கொள்ள வேண்டும் என அரசு தரப்பில் கோரிக்கை விடப்பட்டது. இதையடுத்து முஸ்லிம்களால்தான் கரோனா வைரஸ் அதிகம் பரவுகிறது என்று சமூகவலைதளத்தில் பலரும் கருத்துகளை பதிவிட்டு வரும் நிலையில் இதுகுறித்து நடிகை ராஷி கண்ணா டிவிட்டரில் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார். அதில்...
![cbd](http://image.nakkheeran.in/cdn/farfuture/iC6OlUy9Io_TpEs2TyXVpZxgyWVoIJ6ASyZlWCbcI8c/1586174473/sites/default/files/inline-images/Untitled-1_114.jpg)
''99.99% இந்துக்கள் கோமியம் குடிப்பதில்லை, கரோனா வைரஸை கோமியம் குணப்படுத்தும் என்று அவர்கள் நம்புவதுமில்லை. 99.99% முஸ்லிம்கள் தப்லீக் ஜமாஅத் நிகழ்வை ஆதரிக்கவில்லை, அந்த நிகழ்வில் மவுலானா சாத் சொன்னதை ஏற்கவுமில்லை. கோவிட் 19 வைரஸ் மதச்சார்பற்றது. அது மதத்தின் அடிப்படையில் மக்களை பிரிப்பதில்லை. அது சமத்துவத்தை நம்புகிறது. ஜாதி, மதம், செல்வம், அந்தஸ்து எனத் தொடர்பிலிருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைப் பாதித்துக் கொல்கிறது. ஒருவரை ஒருவர் குற்றம் சொல்வதை நிறுத்திவிட்டு கரோனாவுக்கு எதிரான இந்த போரில் ஒன்றாகச் செயல்படுவோம்" என காட்டமாக பதிவிட்டுள்ளார்.