Skip to main content

"ரஜினி அரசியலுக்கு வந்தால் தங்கள் கட்சி என்னவாகும் என்று பலர் கவலைப்பட்டதற்கு காரணம்..." - ரங்கராஜ் பாண்டே பேச்சு 

Published on 18/12/2021 | Edited on 18/12/2021

 

rangaraj pandey talk about meendum movie

 

இயக்குநர் சரவணன் சுப்பையா இயக்கத்தில் கதிரவன் 'மீண்டும்' என்ற படத்தில் நடித்துள்ளார். இயக்குநர் சரவணன் சுப்பையா அஜித் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற சிட்டிசன் படத்தையும், ஷியாம் நடிப்பில் வெளியான ஏபிசிடி ஆகிய இரண்டு படங்களையும் இயக்கியிருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது கதிரவன் நடிக்கும் 'மீண்டும்' படத்தை இயக்கியுள்ளார். இதில் கதிரவனுக்கு ஜோடியாக அனகா நடித்துள்ளார். இப்படத்திற்கு நரேன் பாலமுருகன் இசையமைக்க, ஹீரோ சினிமாஸ் சார்பில்  சி மணிகண்டன் தயாரிக்கிறார். இந்தியா மீது மறைமுக தாக்குதல் நடத்தும் இலங்கை, சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் விஞ்ஞான ரீதியான தாக்குதலை இப்படத்தில் பேசியுள்ளனர்.

 

சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய ரங்கராஜ் பாண்டே," திரையுலகம் எப்போதுமே மிகப்பெரிய ரீச்சை கொண்டதாக இருக்கிறது. 23 ஆண்டுகள் ஊடகத்துறையில் கிடைத்ததைவிட  நேர்கொண்ட பார்வை படத்தில் அஜீத்துடன் நடித்ததற்கு  பிறகு  பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. சினிமா அவ்வளவு பெரிய வலிமை கொண்டது. ரஜினி அரசியலுக்கு வந்தால் தங்கள் கட்சி என்னவாகும் என்று பலர் கவலைப்பட்டதற்கு காரணம் திரையுலகம் அவரை பிரபலப்படுத்தி வைத்திருந்தது.

 

அப்படிப்பட்ட வீரியம் திரையுலகிற்கு இருக்கிறது. அதனாலேயே சமூக கருத்தை வலியுறுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. இன்றைக்கு சினிமா எடுப்பது சவாலாகி விட்டது. சினிமாக்காரர்கள் எல்லாம் சமூக விஷயத்திலும் தலையிட ஆரம்பித்து விட்டார்கள். சினிமாவைப் பற்றி அரசியல்வாதிகள் நிறைய விமர்சனம் செய்து கொண்டிருந்தார்கள். இப்போது அரசியலுக்கு உள்ளே இவர்கள் நேரடியாக வருவதால் ஒரு கேரக்டருக்கு பெயர் வைப்பதற்கு கூட நிறைய யோசிக்க வேண்டி உள்ளது. மீண்டும் பட டிரைலர் பார்த்தபோது இது த்ரில்லர் படமா, சமூக பிரச்சனையை பேசும் படமா என்று யோசித்தேன். சவாலான விஷயத்தை இதில் சரவணன் சுப்பையா கையாண்டிருக்கிறார். இது சரவண சுப்பையாவுக்கு ஒரு கம்பேக் ஆக, மிகப்பெரிய உயரத்துக்கு இட்டுச்செல்லும் மைல்கல்லாக இருக்கும். இந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக இருக்கும்" எனக் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்