உலகளவில் இசைக் கலைஞர்களை அங்கீகரிக்கும் விதமாக நடைபெற்று வரும் 'கிராமி விருது', இசையுலகில் உயரிய விருதாகக் கருதப்படுகிறது. ஆண்டுதோறும் நடைபெற்று வரும் இந்த விருது விழா, இந்த ஆண்டும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்துள்ளது.
இந்த விழாவில் பிரபல ராப்பர் கான்யே வெஸ்ட்(Kanye West) மற்றும் அவரது மனைவி பியான்கா சென்சோரி(Bianca Censor) இருவரும் கலந்து கொண்டனர். சிவப்பு கம்பள வரவேற்பில் இருவரும் வந்த போது பியான்கா சென்சோரி கருப்பு நிறம் கொண்ட உடை அணிந்திருந்தார். அந்த உடையோடு புகைப்படக் கலைஞர்களுக்கு போஸ் கொடுத்திருந்த அவர் திடீரென அந்த உடையை கழட்டி நிர்வாணமாக போஸ் கொடுத்தார். ஆனால் அவர் மெல்லிய உடை அணிந்திருந்தார். இருப்பினும் அவரின் உடல் பாகங்கள் அனைத்தும் தெரியும் படி அந்த ஆடை இருந்ததால் அது சர்ச்சையைக் கிளப்பியது. இதனால் அவர் மற்றும் அவரது கணவர் இருவரும் விழா ஏற்பாட்டாளர்கள் வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பியான்கா சென்சோரி நிர்வாண போஸ் கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் கண்டங்களையும் எதிர்கொண்டு வருகிறது. பியான்கா சென்சோரி ஆஸ்திரலியா மெல்போர்னில் படித்து வளர்ந்துள்ளார். கட்டிடக்கலை பட்டப்படிப்பு முடித்துள்ள இவர் அந்த துறை சம்பந்தமாக வேலை செய்துள்ளார். அதோடு மாடலாகவும் இருந்து வருகிறார். பின்பு கான்யே வெஸ்ட்டுடன் தொடர்பு ஏற்பட்டு அவரை காதலித்து திருமணம் செய்துகொண்டதாகத் தகவல்கள் சொல்லப்படுகிறது.