நடிகை ரம்யா பாண்டியன் மொட்டை மாடியில் மார்டன் உடைகள் அணிந்து போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் தனது மொட்டைமாடியில் புடவையில் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தன்னுடைய முகநூல் பக்கத்தில் வெளியிட்டார் .நடிகை ரம்யா பாண்டியன் புடவை அணிந்து வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இந்த ஒரே போட்டோஷூட் மூலம் தமிழ் திரையுலகின் பட்டி தொட்டியெல்லாம் பிரபலமானார் நடிகை ரம்யா பாண்டியன்.


இதுதொடர்பாக சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகை ரம்யா பாண்டியன், "இந்த ஃபோட்டோ சூட்டிற்கு ரசிகர்களிடமிருந்து இவ்வளவு ரெஸ்பான்ஸ் வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் ரசிகர்களிடமிருந்து எனக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது . மேலும் இந்த போட்டோ சூட்டிற்கு பிறகுதான் தமிழ் சினிமாவில் நடிக்க நல்ல வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளன. இப்போதைக்கு எல்லா வாய்ப்புகளும் பேச்சுவார்த்தை அளவில் மட்டுமே உள்ளதால், இப்போதைக்கு அதிகாரபூர்வமாக சொல்ல இயலாது. வாய்ப்புகள் உறுதி ஆகிவிட்டால் நானே எந்தெந்த படங்களில் நடிக்கிறேன் என்று உங்களுக்கு தெரிவிக்கிறேன் என்றும் நடிகை ரம்யா பாண்டியன் கூறியுள்ளார்