தெலுங்கு திரை உலகை சேர்ந்தவர்கள் மீது பாலியல் புகார் கூறி, அரைநிர்வாணப் போராட்டம் நடத்தி பிரபலமான நடிகை ஸ்ரீரெட்டி சமீபத்தில் தமிழ் திரையுலகை சேர்ந்த நடிகர்கள் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது பாலியல் புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். ஸ்ரீரெட்டி புகார் குறித்து ரகுல் ப்ரீத் சிங் கருத்து தெரிவித்தபோது... 'எனக்கு அப்படி எதுவும் நடக்கவில்லை. படுக்கைக்கு அழைத்தால் செல்வதும், செல்லாததும் நம் கையில் உள்ளது. திறமைதான் முக்கியம்' என கூறியிருந்தார். இதற்கு ஸ்ரீரெட்டி ரகுலை கடுமையாக திட்டி பேட்டி அளித்தார்.
அதன் பின்னர் நடிகை ஆண்ட்ரியா ஸ்ரீரெட்டி குறித்து பேசியபோது... 'ஸ்ரீரெட்டி இப்படி பேச தைரியம் வேண்டும். அவர் சொல்வதில் உண்மை இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளார். ஆண்ட்ரியா தனக்கு ஆதரவாக பேசியதைப் பார்த்து நெகிழ்ந்த ஸ்ரீரெட்டி, 'சக நடிகைகள் பற்றி எப்படி பேச வேண்டும் என்று ஆண்ட்ரியாவிடம் இருந்து ரகுல் ப்ரீத் கற்றுக் கொள்ள வேண்டும்' என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஸ்டேட்டஸ் போட்டார்.