Skip to main content

‘தி கோட்’ - வெங்கட் பிரபுவை அழைத்த ரஜினி

Published on 19/10/2024 | Edited on 19/10/2024
rajinikanth wishes vijay goat movie

இயக்குநர் வெங்கட் பிரபு கடைசியாக விஜய்யை வைத்து ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தை இயக்கியிருந்தார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, சினேகா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். அப்பா - மகன் பற்றி எடுக்கப்பட்ட இப்படம் கடந்த செப்டம்பர் 5 வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இருப்பினும் உலகம் முழுவதும் ரூ.455 கோடி வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் தெரிவித்தது. 

இப்படத்தின் வெற்றியைத் தயாரிப்பாளர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார் விஜய். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இந்த நிலையில் இப்படத்திற்கு ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளதாக வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கால் செய்து கோட் படத்தை அன்புடன் பாராட்டியதற்காக நன்றி தலைவா. முழு மனதார பாராட்டியதற்காக மீண்டும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் ரஜினியின் வேட்டையன் பட ரிலீஸான போது திரையரங்கில் விஜய்யும் வெங்கட் பிரபுவும் திரையரங்கில் பார்த்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்