இஸ்ரோவில் பணியாற்றிய வான்வெளி ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து 'ராக்கெட்ரி - நம்பி விளைவு' என்ற படத்தை நடிகர் மாதவன் இயக்கியுள்ளார். இப்படத்தை இயக்கியது மட்டுமின்றி நம்பி நாராயணனின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இன்று வெளியாகியுள்ள இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மேலும் திரைபிரபலங்கள் பலரும் படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் ராக்கெட்ரி படத்தை பார்த்து பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "ராக்கெட்ரி திரைப்படம் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டும், குறிப்பாக இளைஞர்கள் பார்க்க வேண்டும். நம் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி வளர்ச்சிக்காக பல துன்பங்களுக்கு உள்ளாகி, தியாகங்கள் செய்து அரும்பாடுபட்ட பத்ம பூஷன் நம்பி நாராயணனின் வரலாறை தத்துரூபமாக நடித்து படமாக்கி இயக்குநராக தனது முதல் படத்திலேயே தலை சிறந்த இயக்குநர்களுக்கு இணையாக தானும் நிரூபித்திருக்கிறார் மாதவன். இப்படி ஒரு திரைப்படத்தை கொடுத்ததற்கு அவருக்கு எனது நன்றிகளும், பாராட்டுக்களும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
@ActorMadhavan #Rocketry pic.twitter.com/bmQpoY7fsR— Rajinikanth (@rajinikanth) July 4, 2022