சமூக கருத்துக்களை தைரியாமாகவும், வெளிப்படையாகவும் பேசுபவர்களில் இயக்குனர் கரு பழனியப்பனும் ஒருவர். விவாத மேடைகளில் அனல் பறக்கும் விவாதங்களை எடுத்துரைக்கும் இவர் சமீபத்தில் ரஜினிகாந்தின் அரசியல் பற்றி பேசும்போது...."எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வரும் போது தனித்தன்மையுடன் வந்தார். ஆனால் ரஜினியோ, எம்.ஜி.ஆர் முகமூடியை அணிந்து கொண்டு அரசியலுக்கு வருகிறார். நீங்கள் ரஜினியாகவே அரசியலுக்கு வாருங்கள். வெற்றிடத்தை நிரப்ப அரசியலுக்கு வருவதாக சொல்கிறீர்கள். எம்.ஜி.ஆர். வரும்போது எந்த வெற்றிடமும் இல்லை. அவர் தனக்கென்று ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டார். ஆன்மீக அரசியல் என்பது ஜாதி, மத, இன பேதமற்ற அரசியல் என்கிறீர்கள். சாதி அரசியல் நடத்துபவர்களை அருகில் வைத்துக் கொண்டால் அது எப்படி சாத்தியமாகும்...நீங்கள் நடித்துள்ள ‘காலா’ படம் வந்தால் முதல் ஆளாக படம் பார்ப்பேன். நீங்கள் அரசியலுக்கு வர வேண்டாம் என்று கூறவில்லை. வாருங்கள். ஆனால், என் ஓட்டு யாருக்கு என்பதை நான் தான் முடிவு செய்வேன்" என்றார். கரு பழனியப்பன் இப்படி பேசியதற்கு சமூகவலைத்தளங்களில் எதிர்ப்பும், ஆதரவும் ஒரு சேர கிடைத்து வருகிறது. மேலும் குறிப்பாக ரஜினி ஆதரவாளர்கள் ஆபத்து காலங்களில் அவர் செய்த உதவிகளின் புகைப்படங்களை பதிவேற்றம் செய்து ரஜினிக்கு ஆதரவாகவும், அதே சமயம் கரு பழனியப்பனுக்கு எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
Published on 19/03/2018 | Edited on 20/03/2018