
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ படத்தில் நடித்துள்ள ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இரண்டு படங்களையுமே சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களது எக்ஸ் பக்கத்தில் ரஜினியுடன் இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ் மற்றும் நெல்சன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளது. இந்த மூன்று இயக்குநர்களும் ரஜினியுடன் படம் பண்ணியுள்ள நிலையில் திடீரென இப்புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் ரஜினியுடன் பேட்ட படத்தை இயக்கியுள்ள நிலையில் அதையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கூலி பட ரிலீஸ் அப்டேட்டை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ரஜினி ரசிகர்கள் இப்புகைப்படதை சமூக வலைதளங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
Petta 🤝 Coolie 🤝 Jailer@rajinikanth @Dir_Lokesh @Nelsondilpkumar @karthiksubbaraj pic.twitter.com/ey2z3Z2mFb— Sun Pictures (@sunpictures) March 20, 2025