கரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் உயர்ந்துக்கொண்டே போகிறது. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களாக இந்த நோயின் தீவிரம் அதிகரித்திருப்பதாக கூறப்படும் நிலையில் 21 நாட்கள் ஊரடங்கு குறித்து பேட்டியொன்றில் இயக்குநர் ராஜமௌலி பேசியுள்ளார். அதில்..
"எல்லாம் மிக வேகமாக நடந்துவிட்டது. சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதே மிகவும் கடினமாக இருக்கிறது. இப்படி ஒரு நிலை வரும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. நாங்கள் எந்தப் பிரச்சனையுமின்றி படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்தோம். திட்டமிட்டபடி எல்லாம் முடியும் தருவாயில் இருந்தன. திடீரென கரோனா குறித்த செய்திகள் வரத்தொடங்கின. அவையெல்லாம் வதந்திகள் என்று நம்பிக் கொண்டிருந்தோம். ஆனால் திடீரென நம் வீட்டு வாசலுக்கே வந்துவிட்டது. இரண்டு நாட்களில் படப்பிடிப்புகள் நடத்தக்கூடாது என்று அறிவிப்பு வந்தது. அதன் பிறகு பிரதமரிடமிருந்து யாரும் வெளியே வரக்கூடாது என்று அறிவிப்பு வந்தது. அனைவரும் வீட்டில் இருந்தே வேலை செய்துகொண்டிருந்தோம். ராம் சரண் பிறந்த நாளுக்கு மோஷன் போஸ்டர் வெளியிட்டது என அனைத்தும் குழப்பமாகி விட்டது" என கூறியுள்ளார்.