Skip to main content

கதறி அழுத பிக்பாஸ் ரைசா !

Published on 11/08/2018 | Edited on 11/08/2018
raiza

 

 

பிக்பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண் - ரைசா நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து தயாரித்துள்ள 'பியார் பிரேமா காதல்' திரைப்படம் தமிழகமெங்கும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் வரவேற்பை பார்ப்பதற்காக படக்குழுவினர் அவ்வப்போது தியேட்டர் விசிட் அடித்த வண்ணம் உள்ளனர். அதன்படி நேற்று 'பியார் பிரேமா காதல்' படத்தின் முதல் காட்சியை காண நடிகை ரைசா வில்சன் அசோக் நகரில் திறக்கப்பட்டுள்ள காசி டாக்கீஸ் திரையங்கத்திற்கு வந்தார்.

 

 


திரையரங்குக்கு வெளியே காரில் வந்த ரைஸாவை நிறுத்தி, படத்திற்கு வந்த வரவேற்பைப் பற்றி நிருபர் கேட்டபோது, உள்ளே படம் பெற்ற வெற்றியால், ஏற்கனவே ரசிகர்கள் வரவேற்பால் நெகிழ்ந்திருந்த ரைஸா, கார் கண்ணாடியை இருக்கும்பொழுதே கண் கலங்கியிருந்தார். தொடர்ந்து நிருபர்கள் கேள்வியெழுப்ப 'தேங்க் யூ... தேங்க் யூ' என்று கூறிக்கொண்டே கதறி அழத் தொடங்கினார். 

 

 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்