Skip to main content

பனி சறுக்கில் பரவசமூட்டும் பிரபாஸ்... அடுத்த அப்டேட்டை வெளியிட்ட 'ராதே ஷ்யாம்' படக்குழு  

Published on 15/12/2021 | Edited on 15/12/2021

 

radhe shyam movie Raegaigal song release date announced

 

யுவி கிரியேஷன்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணா மூவிஸ் தயாரிப்பில், பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ராதே ஷ்யாம்’. இப்படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மிகப்பெரிய பட்ஜெட்டில், ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், தெலுங்கு, இந்தி என இரு மொழிகளில் நேரடியாக எடுக்கப்பட்டு, தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் டப் செய்து வெளியிடப்படவுள்ளது. இப்படத்தில் நடிகர் பிரபாஸ் கைரேகை நிபுணர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்

 

சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ‘ராதே ஷ்யாம்’ படத்தின்  மூன்றாவது பாடலான 'ரேகைகள்' பாடல் நாளை (16.12.2021) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்பாடலின் டீசர் நேற்று (14.12.2021) வெளியாகி  யூடியூப் தளத்தில் ஒரு லட்சம் பார்வையாளர்களைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்