Skip to main content

பிக்பாஸ் ஜோடியின் 'பியார் பிரேமா காதல்' படத்தின் முக்கிய அறிவிப்பு

Published on 26/07/2018 | Edited on 26/07/2018
pyaar prema kadhal

 

 

 

பிக்பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண் - ரைசா வில்சன் இணைந்து நடித்திருக்கும் 'பியார் பிரேமா காதல்' படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுவரும் நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 29ஆம் தேதி நடைபெறஇருப்பதாக படக்கழு அறிவித்துள்ளது. புதுமுக இயக்குநர் இளன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் சார்பில் யுவன் ஷங்கர் ராஜாவும், 'கே புரொடக்ஷன்ஸ்’ சார்பில் ராஜராஜனும் இணைந்து தயாரித்துள்ளனர். காதல் கலந்த காமெடி படமாக உருவாகி இருக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். படத்தில் இருந்து இரு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ஹிட்டடித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

 

 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்