Skip to main content

''அவர்களை 15 நாட்களுக்குள் தண்டிக்கவேண்டும்'' - விஜய் படத் தயாரிப்பாளர் பிரதமருக்கு வேண்டுகோள்!

Published on 13/05/2020 | Edited on 13/05/2020

 

fwqfq

 

'ஒன்பதுல குரு' படத்தின் இயக்குனரும், 'பந்தா பரமசிவம்', 'புலி', 'போக்கிரி ராஜா' உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளருமான பி.டி செல்வகுமார், அவரின் 'கலப்பை மக்கள் இயக்கம்' சார்பாக கரோனா பாதிப்பு ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு கடந்த 40 நாட்களாக தொடர்ந்து அரிசி மூட்டைகள் வழங்கி வருகிறார். நேற்றைய தினம் திருப்போரூர், கேளம்பாக்கம் பகுதிகளில் வீட்டு வேலை செய்யும் பணி பெண்கள் 100 பேருக்கு அரிசி மூட்டை மற்றும் காய்கறிகளை வழங்கிய அவர், சமீபத்தில் விழுப்புரம் பகுதியில் 10 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஜெயஸ்ரீ என்பவரை பட்டப் பகலில் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற கொலையாளிகளை மாணவியின் மரணவாக்குமூலத்தின் அடிப்படையில் தண்டிப்பது குறித்து பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்து பேசியுள்ளார். அதில்...

 

''இந்தியா முழுவதுமுள்ள சிசுக் கொலை, பாலியல் வன்கொலை, ஆசிட் ஊற்றி கொலை, நகைக்காக கொலை, வரதட்சணை கொலை ஆகிய வன்கொலைகள் பெண்களுக்கு ஏற்படுகிறது. பெண்கள் மென்மையானவர்கள், போற்றப்பட வேண்டியவர்கள். ஜெயஸ்ரீ என்பவரை கொலை செய்தது போன்று மீண்டும் ஒரு கொலை நடைபெறாமல் இருக்க கொலை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். சட்டத்தில் இவர்களுக்குத் தண்டனை இருந்தாலும் குற்றவாளிகள் எளிதில் தப்பி விடுகிறர்கள். ஆகவே பாரத பிரதமர் அவர்கள் (சிறப்பு) புதிய சட்டம் ஒன்றை இயற்றி, பெண்களை கொடூர கொலை செய்யும் குற்றவாளிகளுக்கு உடனடியாகத் தண்டனை வழங்க வழி வகை செய்ய வேண்டும். 15 நாட்களுக்குள் வழக்கை முடித்து தண்டனை வழங்க வேண்டும். அப்போதுதான் குற்றம் செய்வதற்கு அச்சம் ஏற்படும். கொலை சம்பவங்கள் குறையும். பாரதியார், ராஜாராம் மோகன்ராய், காந்தியடிகள் இவர்கள் எல்லோரும் பெண்கள் பாதுகாப்புக்காக மாபெரும் குரல் கொடுத்தவர்கள். ஆகவே கொலை சம்பவங்கள் நடக்காமல் இருக்க பாரத பிரதமர் அவர்கள் அவசரமாக சட்டம் இயற்றி, இந்த கொலைகாரர்களுக்கு தண்டனை வழங்கிட வேண்டும். அப்போதுதான் பெண்கள் சுதந்திரமாக நடமாடுவதோடு, நிம்மதியாக இந்த மண்ணுலகில் வாழ முடியும். மேலும், அவர் செவிலியர் தினத்தை முன்னிட்டு நிறைய செவிலியர்களுக்கும் உதவிகள் வழங்கி கௌரவித்தார். குடும்பத்தை துறந்து கரோனா காலத்திலும் அவர்கள் செய்யும் சேவையையும், தியாகத்தையும் பாராட்டுவோம்" என பி.டி செல்வகுமார் கூறினார்.

 

சார்ந்த செய்திகள்