Skip to main content

ஜெயலலிதா வாழ்க்கை படத்தை விமர்சித்த கமலுக்கு பதிலடி கொடுத்த இயக்குனர் 

Published on 18/10/2018 | Edited on 18/10/2018
iron lady

 

 

 


முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம் ‘த அயர்ன் லேடி’ என்ற பெயரில் உருவாகிறது. அறிமுக இயக்குனர் பிரியதர்ஷினி இயக்கும் இப்படத்தில் ஜெயலலிதாவாக நித்யா மேனன் நடிக்க சசிகலா வேடத்தில் வரலக்ஷ்மி சரத்குமார் நடிப்பதாக தகவல் வெளியானது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் ’இந்த படம் ஒருதலைபட்சமானது’ என்று விமர்சித்தார். இந்நிலையில் இயக்குனர் பிரியதர்ஷினி தற்போது கமல் விமர்சித்தது குறித்து தாக்கி பேசியபோது... "த அயர்ன் லேடி’ படத்தை ஒருதலைபட்சமானது என்று விமர்சித்த கமல்ஹாசனுக்கு, மக்கள் எழுச்சி என்பார், மாணவர் புரட்சி என்பார், ஊர்கூடி தேர் இழுப்போம் என்று இவர் தம் நோக்கம் அறியா மக்களை மய்யமாக கொண்டு பேசுவார். ஆனால் பல ஆண்டுகளுக்கு பின்பு புரட்சியை எல்லாம் தள்ளிவிட்டு ஓட்டு வங்கிக்காகவும், சுயநலத்தோடும் பல ஆண்டுகளுக்கு பின்பு தேவர் மகன் 2 எடுத்து கொண்டாட இருக்கிறார் என்று சொன்னால் ஏற்றுக்கொள்வாரா..? உண்மை போல் தோற்றம் அளிக்கும், வேஷம் போடும் மனிதர்களை நிந்தை செய்" என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்