Skip to main content

‘டாப் ஸ்டார்’ பிரசாந்தை வைத்து முதன் முறையாக இயக்கப்போகும் கௌதம் மேனன்?

Published on 29/08/2019 | Edited on 29/08/2019

கடந்த வருடம் பாலிவுட்டில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற படம் அந்தாதுன். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்ற இப்படம், சிறந்த ஹிந்தி படத்திற்கான தேசிய விருது வாங்கியது. இதில் நடித்த ஆயுஷ்மான் குரானா சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் வாங்கினார். அடாப்ட ஸ்கீரின்பிளேவுக்கும் இந்த படத்திற்குதான் தேசிய விருது கிடைத்தது. 
 

gautham vasudev menon


மூன்று விருதுகளை பெற்ற இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். முதலில் சித்தார்த் இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்தால் எப்படி இருக்கும் என்று ட்விட்டரில் கேள்வி எழுப்பினார். பின்னர், தனுஷ் இந்த படத்தை வாங்கி, அதில் நடிக்க ஆர்வம் காட்டுவதாக செய்திகள் வெளியாகின.
 
இந்நிலையில், டாப்ஸ்டார் பிரசாந்த் இந்த படத்தை வாங்கியுள்ளதாகவும், தமிழில் ரீமேக் செய்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இந்த அந்தாதுன் தமிழ் ரீமேக் குறித்தான அறிவிப்பு வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது. 
 

sixer


தற்போது இந்த படத்தை கௌதம் மேனன் இயக்குகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை எப்படியாவது ஹிட் கொடுத்தாக வேண்டும் என்று பிரசாந்த் கடினமாக உழைத்து வருகிறார் என்றும். உடல் எடையை குறைத்திருக்கிறார் பிரசாந்த் என்றும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. 

 

 

சார்ந்த செய்திகள்