விஜய்சேதுபதி, அதர்வாவுக்கு பிறகு தமிழ் சினிமாவில் பிசி நாயகனாக வலம் வந்துகொண்டிருக்கிறார் நடிகர் பிரபுதேவா. தற்போது யங் மங் சங், சார்லி சாப்ளின் 2, பொன் மாணிக்கவேல், தேவி 2 ஆகிய படங்களில் நடித்து கொண்டிருக்கும் அவர் சமீபகாலமாக நடனம் மற்றும் இயக்கத்தில் இருந்து ஒதுங்கி நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் நடிகர் பிரபுதேவா, அமிதாப் பச்சன், அமீர்கான் இணைந்து நடிக்கும் 'தக்ஸ் ஆப் இந்தோஸ்தான்' படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்காக நடனம் அமைத்து கொடுத்துள்ளார். அமிதாப்பும், அமீர்கானும் இணைந்து ஆடும் 'வாஷ் மாலே' எனத் தொடங்கும் இந்த பாடலின் தமிழ் பதிப்பை மதன் கார்க்கி எழுதியுள்ளார். இந்த பாடலுக்கு இப்போதே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் 'தக்ஸ் ஆப் இந்தோஸ்தான்' படம் வரும் நவம்பர் 8ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.