பிரபாஸ் நடிப்பில் ஆகஸ்ட் 30ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகியுள்ள திரைப்படம் சாஹோ. மிக அதிக பொருட்செலவில் சுமார் ரூ. 350 கோடி செலவில் மிக பிரமாண்டமாக எடுக்கப்பட்டுள்ள படம் இது. இந்த படத்தின் பட்ஜெட் நினைத்ததைவிட அதிகமானதால் தன்னுடைய சம்பளத்தில் 20 சதவீதத்தை மற்றும் பிரபாஸ் பெற்று மற்றவற்றை விட்டுகொடுத்துள்ளார். தமிழக நடிகர் அருண் விஜய் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பாகுபலிக்கு பின்னர் இந்த படம் ரிலீஸ் ஆகியுள்ளதால் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலுள்ள அவரது ரசிகர்கள் வெறித்தனமாக கொண்டாட தியேட்டர் முழுவதும் பேனர்கள், போஸ்டர்கள் கொண்டாடி படத்தை வரவேற்று வருகின்றனர்.

இந்நிலையில், தெலுங்கானாவில் உள்ள திரையரங்கம் ஒன்றில் பிரபாஸின் ரசிகர் ஒருவர் பேனர் கட்டிய போது மின்சார ஒயர் உரசியதால் மின்சாரம் பாய்ந்ததில் தியேட்டர் கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 16, தினசரி கூலி வேலை பார்த்து சம்பாதித்து வருகிறார் பெயர் வெங்கடேஷ். இது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விசாரணை நடத்தி உள்ளார்கள். பிரேத பரிசோதனைக்கு அந்த நபரின் உடல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர் பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.