Skip to main content

கங்கா ஆரத்தி பூஜை செய்த பூஜா ஹெக்டே

Published on 22/03/2025 | Edited on 22/03/2025
Pooja Hegde Perform Ganga Aarti In Rishikesh

தமிழில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் பூஜா ஹெக்டே, கைவசம் விஜய் நடிக்கும் ஜனநாயகன், சூர்யா நடிக்கும் ரெட்ரோ ஆகிய படங்களை வைத்துள்ளார். மேலும் ரஜினி நடிப்பில் உருவாகும் கூலி படத்திலும் நடித்துள்ளார். அதோடு ராகவா லாரன்ஸின் காஞ்சனா நான்காம் பாகத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. 

இதனிடையே இந்தியில் வருண் தவானுக்கு ஜோடியாக இன்னும் பெயரிடப்படாத தலைப்பில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை வருண் தவானின் தந்தை மற்றும் இயக்குநர் டேவிட் தவான் இயக்குகிறார். ரொமான்ஸ் காமடி ஜானரில் உருவாக்கப்படுவதாக சொல்லப்படும் இந்த படத்தின் படப்பிடிப்பு உத்தரகாண்டில் கங்கை நதிக்கரைக்கு அருகில் உள்ள ரிஷிகேஷில் தற்போது நடக்கிறது. 

மொத்தம் மூன்று நாட்கள் நடப்பதாக சொல்லப்படும் இந்த படப்பிடிப்பில், கலந்து கொள்வதற்காக சென்ற பூஜா ஹெக்டே வருண் தவானுடன் இணைந்து படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாக பர்மார்த் நிகேதன் ஆசிரமத்தில் நேற்று(21.03.2025) கங்கா ஆரத்தி எடுத்து பூஜை செய்ததுள்ளார். மேலும் உலக வன தினமான நேற்று ஆசிரம வளாகத்தில் புனித ருத்ராட்ச மரக்கன்று ஒன்றையும் வருணுடன் இணைந்து வழங்கினார்.

சார்ந்த செய்திகள்