Published on 24/10/2018 | Edited on 24/10/2018
![viswasam](http://image.nakkheeran.in/cdn/farfuture/_4h0GmLiyXl9-QPt5lr-7EJRlkVIvukX-fozb1VSSGQ/1540380300/sites/default/files/inline-images/DqP7SLNWoAAdmbL.jpg)
அஜித் - சிவா கூட்டணியில் நான்காவது படமாக உருவாகும் 'விஸ்வாசம்' படத்தின் பெரும்பாலும் அனைத்து படப்பிடிப்புகளும் முடிந்து விட்ட நிலையில் தற்போது மீதம் உள்ள பட பாடல் காட்சிகளின் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே இதற்கிடையே படத்தின் டப்பிங் பணிகளும் வேகமாக நடைபெற்று கொண்டிருக்கும் வேளையில் நடிகர் அஜித் தனது டப்பிங் பணிகளை முழுமையாக முடித்துள்ளார். மேலும் வந்தந்திகளை யாரும் நம்பவேண்டாம் என்றும், 'விஸ்வாசம்' படம் வரும் பொங்கல் தினத்தன்று கண்டிப்பாக வெளிவருவது உறுதி என படக்குழு சார்பில் நம்பத்தகுந்தவர் மூலம் தகவல் கிடைத்துள்ளது. சமீபத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'பேட்ட' படம் பொங்கலுக்கு வெளிவரவுள்ளதால் 'விஸ்வாசம்' படம் தள்ளிப்போவதாக செய்திகள் பரவியது குறிப்பிடத்தக்கது.