Skip to main content

"இந்தியனாய் இருப்பதற்கு இந்தி தெரியவேண்டிய அவசியம் இல்லை!" - பேரரசு கருத்து!

Published on 14/08/2020 | Edited on 14/08/2020
vjvk

 

 

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியிடம் சென்னை விமான நிலையத்தில், பாதுகாப்பு அதிகாரி ஒருவர் இந்தியில் எதையோ சொல்ல, அதற்கு அவர் தனக்கு இந்தி தெரியாது. ஆங்கிலம் அல்லது தமிழில் பேசுங்கள் என்றார். உடனே அவர், நீங்கள் இந்தியரா? என கேட்டுள்ளார். அதற்கு உடனே உடனே தான் திடுக்கிட்டதாகவும், இந்தி தெரிந்தால் போதும் அது இந்தியராக இருப்பதற்கு சமமா என்பதை அறிய விரும்புகிறேன் எனவும் கனிமொழி எம்.பி. சமீபத்தில் ட்விட்டரில் பதிவிட்டார். இதற்கு பல்வேறு பிரபலங்கள் ஆதரவும், கண்டனமும் தெரிவித்தனர். இதற்கிடையே இயக்குனர் பேரரசும் தற்போது இந்தி திணிப்பு குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில்..    


"இந்தியனாய்
இருப்பதற்கு
இந்தி தெரியவேண்டும்
என்ற
அவசியம் இல்லை!


அவசியம்
இருந்தால்
இந்தி கற்றுக்கொள்வதில்
தவறும் இல்லை!
               

*பேரரசு*" என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்