Skip to main content

ரஜினி அரசியலுக்குப் போக வேண்டாமா? யோகி பாபு பட ட்ரைலர் வெளியீடு! 

Published on 06/11/2020 | Edited on 06/11/2020

 

yogi

 

சக்தி சிதம்பரம் இயக்கத்தில், வடிவேலு நடிப்பதாக இருந்த படம் 'பேய்மாமா'. ஆனால், சில காரணங்களால் வடிவேலு நடிக்க முடியாமல் போனது. இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தில் யோகி பாபு நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.    

 

பாக்யா சினிமாஸ் பட நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா, சமீபத்தில்  நடைபெற்றது. இதில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு 'பேய் மாமா' படத்தின் இசையை வெளியிட்டார். 

 

    
இந்தநிலையில், படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ், படத்தின் ட்ரைலரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 'பாகுபலி', 'பேட்ட', ரஜினி அரசியல் உள்ளிட்ட ரெஃபெரென்ஸ்களை, இந்த ட்ரைலர் கொண்டுள்ளது.

 

   

சார்ந்த செய்திகள்