இன்றைய டிஜிட்டல் உலகில் தியேட்டர்களின் பயன்பாடு குறைந்து, ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களின் ராஜ்ஜியம் தொடங்கியுள்ளது. உலகம் முழுவதும் நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் உள்ளிட்ட பல ஸ்ட்ரீமிங் தளங்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.
இதற்கிடையே கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஊரடங்கு அமலில் இருப்பதால் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் இன்னமும் அதிகரித்து வரும் நிலையில் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களை விமர்சித்து ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் சமுகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...
''ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களின் உள்ளடக்கங்கள் சில நாட்களாகச் சலிப்பூட்டுகின்றன. எல்லா தொடர்களும் ஒரே இருண்ட கதைகளைக் கொண்டுள்ளன. சிலவற்றைப் பார்த்த பிறகு அவர்கள் பின்பற்றும் முறை பழையதாகவும், கணித்துவிடக்கூடியதாகவும் இருப்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். ஆக்கபூர்வமாக எதுவும் இல்லை. கலை என்பது இப்போது ஒரு வியாபார சரக்காகி விட்டது" எனப் பதிவிட்டுள்ளார்.