Skip to main content

'பெண்கள் இன்னும் பலவீனமாகவும், பாதிக்கப்பட்டும் இருக்கிறார்கள்' - பொங்கிய இயக்குனர் 

Published on 16/10/2018 | Edited on 16/10/2018
pattarai

 

பெண்மையை மதிக்கும் திரைப்படங்கள் வந்து கொண்டே இருந்தாலும், பெண்களின் பாதுகாப்பு பற்றி பேசும் படங்கள் குறைவாக இருப்பதால், அதை மையமாக வைத்து 'பட்டறை' படத்தை உருவாக்கியுள்ளார் கே.வி.ஆனந்தின் முன்னாள் உதவியாளர் இயக்குனர் பீட்டர் ஆல்வின். ரேணுகா, டிக்ஷானா, ஜகதேஷ், தனபால், ரஞ்சன், எலிசபெத், சதீஷ், சஞ்சீவ், கார்த்திக் ஆகியோருடன் பல திருநங்கைகள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் குறித்து இயக்குனர் பீட்டர் ஆல்வின் பேசும்போது....

 

 

 

"நாம் பெரும்பாலும் பெண்களின் மதிப்பைப் பற்றி பேசுகிறோம். அவர்களை தெய்வங்களின் வடிவத்தில் வைத்து கொண்டாடுகிறோம். அவர்களை ஊக்கப்படுத்த நிறைய பேசுகிறோம். ஆனால் உண்மையில், நம் வீட்டில் உள்ள பெண் குழந்தைகளுக்கு அவர்களது பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பற்றி எவ்வாறு சொல்லிக் கொடுத்திருக்கிறோம். நிச்சயமாக, அவர்கள் தங்கள் கனவுகளை  நிறைவேற்றுவதற்கான ஒரு சுதந்திரத்தை வழங்கியுள்ளோம். ஆனால், அவர்கள் இன்னும் பலவீனமானவர்களாகவும், பாதிக்கப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள். வீட்டில் ஒரு பெண் எப்படி சிறந்த பெண்ணாக  மாற்றப்பட வேண்டும் என்ற கருத்தை 'பட்டறை' சொல்லும். இப்படத்தின் கதை மற்றும் கதாபாத்திரங்களை எழுதி முடித்த பின்னர், அந்த கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுக்கும் பொருத்தமான நடிகர்களை கண்டுபிடிப்பது தான் மிகக் கடினமான பணியாக இருந்தது. ஜே.டி. சக்ரவர்த்தி போன்ற நடிகர்களை பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த படத்தில் புதிதாக அறிமுகமாகும் அனைத்து நடிகர், நடிகையர்களுக்கும் தியேட்டர் ஒர்க்‌ஷாப் மூலம் நடிப்பு பயிற்சி கொடுக்கப்பட்டிருக்கிறது. நகைச்சுவை நடிகர் செந்தில் முதன்முறையாக காமெடி இல்லாத ஒரு முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்" என்றார். 

 


 

சார்ந்த செய்திகள்