தமிழ் சினிமாவில் சமீபகாலத்தில் வித்தியாசமான புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் பார்த்திபன். அந்த வகையில் ‘ஒத்த செருப்பு அளவு 7’ படத்தை தொடர்ந்து 'இரவின் நிழல்' படத்தை இயக்கி நடித்துள்ளார். ‘ஒத்த செருப்பு அளவு 7’ படத்தை போலவே இந்த படத்திலும் ஒரு புது முயற்சியை கையாண்டுள்ளார். அதாவது, 96 நிமிடங்கள் ஒரே ஷாட்டில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. நான் லீனியர் திரைக்கதை முறையில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. 'அகிரா புரொடக்ஷன்ஸ்' தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் மற்றும் ஒரு பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
இந்நிலையில் 'இரவின் நிழல்' படம் உலக புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பார்த்திபன் தெரிவித்துள்ளார். அந்த பதிவில், "சர்வதேச திரைப்பட விழாவான கேன்ஸ் பட விழாவில் என் "இரவின் நிழல் " திரையிடப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சி கலந்த உள்ளடக்கத்தோடு தெரிவித்துக்கொள்கிறேன். தமிழோடு கேன்ஸ் பறக்க தயாராகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
'கேன்ஸ் திரைப்பட விழா 2022' மே 17-ஆம் தேதி முதல் மே 28-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவில் மாதவன் நடித்து இயக்கியுள்ள 'ராக்கெட்ரி - நம்பி விளைவு' படம் மற்றும் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள 'விக்ரம்' படத்தின் ட்ரைலரும் திரையிடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச திரைப்பட விழாவான கேன்ஸ் பட விழாவில் என் "இரவின் நிழல் "திரையிடப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சி கலந்த உள்ளடக்கத்தோடு
தெரிவித்துக்கொள்கிறேன். தமிழோடு கேன்ஸ் பறக்க தயாராகிறேன். #இரவின்நிழல் #iravinnizhal pic.twitter.com/Xsm0fTF8wz— Radhakrishnan Parthiban (@rparthiepan) May 15, 2022