Skip to main content

“பட்டியலின மக்களுக்கான உரிமை குறித்துப் பேசினால் பி-டீம் என்று சொல்கின்றனர்” - பா.ரஞ்சித்

Published on 20/07/2024 | Edited on 20/07/2024
Pa. Ranjith speech at amstrong Memorial rally

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 05.07.2024 அன்று இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கிய நிலையில், கொலை வழக்கில் ஏகப்பட்ட திருப்பங்கள் நடந்து வருகிறது. முதலில் 11 பேரைக் கைது செய்தனர் போலீஸார். பின்பு சில நாட்கள் கழித்து போலீஸாரின் பிடியிலிருந்து தப்பிய ஓடியதாகக் கூறி திருவேங்கடம் என்பவரை என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர் காவல் துறையினர். இதையடுத்து இதுவரை கைது செய்த 16 பேரரிடமும் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதனிடையே ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி வேண்டி நினைவேந்தல் பேரணி நடத்தவுள்ளதாக இயக்குநர் பா.ரஞ்சித் அறிவித்திருந்தார். அதன்படி இன்று சென்னை எழும்பூர் ரமடா ஹோட்டல் அருகே பா.ரஞ்சித்தின் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒன்று கூடினர். அங்கிருந்து தொடங்கிய பேரணி ராஜரத்தினம் மைதானம் அருகே நிறைவடையவுள்ளது. இதில் பா.ரஞ்சித்துடன், மன்சூர் அலிகான், நடிகர் தினேஷ் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் கலந்து கொண்டனர்.

பேரணியை நிறைவு செய்த பின்னர் இயக்குநர் பா.ரஞ்சித் கூறியதாவது, “பட்டியலின மக்களுக்கான உரிமை குறித்துப் பேசினால் பி-டீம் என்று சொல்கின்றனர். பாபாசாகேப் அம்பேத்கரின் கருத்தின் அடிப்படையில் ஒரு நாள் என் மக்கள் என அனைவரும் ஒன்று திரள்வார்கள். சமூகத்தில் நோய் இருக்கிறது என்று சொன்னால் இவன் நோயைப் பரப்புகிறான் என்று கூறுகின்றனர். பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு காரணமாக உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிய வேண்டும். உண்மையான குற்றவாளிகளைக் கண்டறியாவிட்டால் காவல்துறைக்கு நிர்பந்தத்தை உருவாக்குவோம். நம் ஒற்றுமைக்கு விலை பேசுகின்றனர். பா.ஜ.கவிற்கு எப்போதும் நேர் எதிரானவர்கள் நாங்கள்” எனப் பேசினார். 

சார்ந்த செய்திகள்