Skip to main content

45 நாட்களில் 40 லொகேஷன்களில் நடந்து முடிந்த பா.ரஞ்சித் படம்!

Published on 09/08/2019 | Edited on 09/08/2019

பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் இரண்டாவது படமாக உருவாகும் “இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு” படத்தில் தினேஷ், ஆனந்தி, ரித்விகா, லிஜீஸ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அதியன் ஆதிரை இப்படத்தை இயக்கியுள்ளார். கலை இயக்குநராக த.ராமலிங்கம் பணிபுரிந்திருக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக கிஷோர் குமார் பணியாற்றி இருக்கிறார்.ஒளிப்பதிவாளராக அறிமுகமாகும் முதல் படத்திலேயே பல சவால்களை சந்தித்து ஒரு இயக்குநருக்கான ஒளிப்பதிவாளர் என்கிற நற்பெயரை சம்பாதித்திருக்கிறார் கிஷோர் குமார். 

 

pa ranjith

 

 

இவர் திட்டமிடப்பட்டபடி 45 நாட்களில் 40 லொகேஷன்களின் ஷூட்டிங் நடத்தியாக வேண்டிய சவாலை ஏற்று, இயக்குநரோடு தோளுக்கு தோளாக நின்று படத்தினை குறித்த நேரத்தில் முடிப்பதற்கு பக்கபலமாக இருந்திருக்கிறார். இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்த இயக்குநர் அதியன் ஆதிரை..... “நிச்சயமாக இது ஒரு கடினமான பயணம்தான். எங்களுக்கு 45 நாட்களில் 40 லொகேஷன் என திட்டமிடும் போது மனதிற்குள் ஒரு அச்சம் இருந்தது. ஆனால் அந்த அச்சத்தை போக்கி, திட்டமிட்டபடி முடிப்பதற்கு கிஷோர் கடுமையாக உழைத்தார்” என்று கிஷோர் குமாரை பாராட்டி தள்ளினார். பல்வேறு பாராட்டுகளை பெற்று வரும் ஒளிப்பதிவாளர் கிஷோர் குமார், “மெட்ராஸ்”, “கபாலி”, “காலா” படங்களின் ஒளிப்பதிவாளரான முரளியின் மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்