Published on 12/05/2021 | Edited on 12/05/2021
![maran](http://image.nakkheeran.in/cdn/farfuture/MxgqKOYC2s3nz1OmhVhfsru5GZFZoTnAFrnFbywaWXQ/1620817924/sites/default/files/inline-images/12_66.jpg)
‘கில்லி’, ‘குருவி’, ‘டிஷ்யூம்’ உள்ளிட்ட பல படங்களில் துணை நடிகராக நடித்த நடிகர் மாறன் இன்று காலமானார். கரோனா தொற்றுக்குள்ளாகி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாறன், சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இதனையடுத்து, மாறனின் மறைவிற்கு திரைத்துறை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
அந்த வகையில், நடிகர் மாறன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து இயக்குநர் பா.ரஞ்சித் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "கடக்க முடியாத துயரம். எப்போதும் கட்டுக்கடங்காத அன்பைப் பொழியும் மாறன் அண்ணாவே, உன் முகத்தைக்கூட காட்டவில்லை என்று உன் மகள் அழுகிறாள்ணா. என்னிடம் தேற்றுவதற்கு வார்த்தைகள் இல்லை. நண்பர்களே பாதுகாப்பாக இருங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.