உலக திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதானது சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆண்டுதோறும் வழங்கப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டிற்கான 94வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாஅமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. 4 வருடங்களுக்கு பிறகு ஆஸ்கர் பாரம்பரிய முறைப்படி நடைபெற்று வரும் இவ்விழாவில் மொத்தம் 23 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.
அவை பின்வருமாறு...
சிறந்த திரைப்படம் - கோடா
சிறந்த இயக்குநர் - ஜேன் கேம்பியன் ( தி பவர் ஆப் தி டாக்)
சிறந்த நடிகர் - வில் ஸ்மித் (கிங் ரிச்சர்ட்)
சிறந்த நடிகை - ஜெசிகா சாஸ்டெய்ன் (தி ஐஸ் ஆப் டாமி ஃபே)
சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் - டியூன்
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு - டியூன்
சிறந்த சர்வதேச திரைப்படம் - ட்ரைவ் மை கார் (ஜப்பான்)
சிறந்த ஒளிப்பதிவு - கிரெக் ஃப்ரேசர் (டியூன் )
சிறந்த அசல் பாடல் - பில்லி இலிஷ் மற்றும் ஃபின்னியாஸ் ஓ'கானல் ( நோ டைம் டூ டை)
சிறந்த ஆவணப்படம் (குறும்படம்) - தி கியூன் ஆப் பாஸ்கெட்பால்
சிறந்த ஆவணப்படம் ( திரைப்படம்) - சம்மர் ஆப் சோல்
சிறந்த அனிமேஷன் திரைப்படம் - என்காண்டோ
சிறந்த அனிமேஷன் (குறும்படம் ) - தி விண்ட்ஷீல்ட் வைப்பர்
ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் - "தி ஐஸ் ஆஃப் டாமி ஃபயே"
சிறந்த படத்தொகுப்பு - ஜோ வாக்கர் (டியூன்)
சிறந்த துணை நடிகர் - டிராய் காஸ்டர் (கோடா)
சிறந்த துணை நடிகை - ஹரியானா டிபோஸ் (வெஸ்ட் சைட் ஸ்டோரி)
சிறந்த லைவ் ஆக்சன் குறும்படம் - (தி லாங் குட்பை)
சிறந்த திரைக்கதை - கென்னித் ப்ரானா (பில்ஃபெஸ்ட்)
சிறந்த தழுவல் திரைக்கதை - சியான் ஹேதர் (கோடா)
சிறந்த இசை (அசல் ஸ்கொர்) - டியூன்
சிறந்த ஆடை வடிவமைப்பு: க்ருயெல்லா
சிறந்த ஒலி - டியூன்